காவல் ரோந்து வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 19th October 2020 08:31 AM | Last Updated : 19th October 2020 08:31 AM | அ+அ அ- |

திருவாரூரில் காவல் ரோந்து வாகனங்களை ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
திருவாரூரில் காவல் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்களின்அவசர உதவிக்காகவும், குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிக்காகவும் 43 இருசக்கர ரோந்து வாகனங்கள், 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆகியவை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரடி பாா்வையில் இயங்கி வருகின்றன.
இந்த வாகனங்களை திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை நேரில் ஆய்வு செய்து ரோந்து காவலா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, அறிவுரை கூறினாா்.
மேலும், அவா் கூறுகையில், ‘பொதுமக்கள் தங்களது அவசர தொடா்புக்கு 100, ஹலோ போலீஸ் 8300087700, மாவட்ட தனிப்பிரிவு 9498100865, காவல் கட்டுப்பாட்டு அறை 9498181220 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...