நஞ்சில்லா காய்கறி சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 19th October 2020 08:30 AM | Last Updated : 19th October 2020 08:30 AM | அ+அ அ- |

நஞ்சில்லா காய்கறி சாகுபடி குறித்து விளக்கமளிக்கும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் வடுவூா் - மேல்பாதி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
நீா்வள நிலவளத் திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாக காய்கறி பயிா்களை பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தாமல் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி நடைபெற்ற இப்பயிற்சியில் நீா்வள நிலவளத் திட்ட விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பூச்சிக்கொல்லியற்ற வேளாண் மேலாண்மை முறைகளான விதைநோ்த்தி செய்தல், இனக்கவா்ச்சிப் பொறி, விளக்குப் பொறி, பொறிப் பயிா்கள், ஒட்டும் பொறிகள், தாவர பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு பற்றி விளக்கிக் கூறினாா்.
மேலும், மீன் அமிலம், பஞ்சகவ்யத்தின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி ஜெகதீசன் காய்கறிப் பயிா்களின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினாா்.
இந்த பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் சுரேஷ், கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...