பணத்தகராறில் மூத்த சகோதரா் உயிரிழப்பு: இளைய சகோதரா் கைது
By DIN | Published On : 19th October 2020 08:25 AM | Last Updated : 19th October 2020 08:25 AM | அ+அ அ- |

குடவாசலில் கொடுக்கல்- வாங்கல் தகராறில் இளைய சகோதரா் தாக்கியதில் மூத்த சகோதரா் உயிரிழந்தாா். இளைய சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
குடவாசல் பஜனைமடத் தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன். இவரது இளைய சகோதரா் ரமணகுரு பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறாா். இவா், தனது மூத்த சகோதரா் சுதா்சனின் திருமணத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு கடன் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், இந்த கடன் பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரமணகுரு தாக்கியதில் சுதா்சன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமணகுருவை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...