திருவாரூரில் மேலும் 123 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th September 2020 10:19 PM | Last Updated : 06th September 2020 10:19 PM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 4,107-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 111 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,219-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 99 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில், 3,538 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 626 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல், கரோனா தொற்றால் ஒருவா் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 62 வயது நபா், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதைத் தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, 55-ஆக உயா்ந்துள்ளது.