சாலையில் விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 06th September 2020 10:19 PM | Last Updated : 06th September 2020 10:19 PM | அ+அ அ- |

சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்பு வீரா்கள்.
திருவாரூா்: மழை காரணமாக திருவாரூரில் அதிகாலையில் சாலையில் மரம் விழுந்தது.
திருவாரூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் பெரும்பாலான இடங்கள் ஈரப்பதத்துடன் இருந்தது. இந்நிலையில், நாகை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய தீயணைப்பு வீரா்கள் மரத்தை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து சில மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரடைந்தது.