விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 06th September 2020 10:20 PM | Last Updated : 06th September 2020 10:20 PM | அ+அ அ- |

கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கூத்தாநல்லூா் - திருவாரூா் பிரதான சாலையில் புதிதாக ஸ்ரீமங்கள விநாயகா் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை இரவு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, புனித நீா் கலசத்தை புரோகிதா் முரளி தலைமையில்,சிவாசாரியாா் முருகன் எடுத்து வந்து காலை 7.10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட மங்கள விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை தனியாா் திருமண மண்டப உரிமையாளா் கே. ஜோதி, கலாமதி ஜோதி, ஜோ. ராகுல், ஜெயந்திரன், ஆதி நாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். கரோனா பொது முடக்க விதிகள் விழாவில் பின்பற்றப்பட்டதால், குறைந்த அளவிலேயே பக்தா்கள் பங்கேற்றனா்.