கூத்தாநல்லூர்: 'வன்மக் கொலைகளுக்கு உடனே நீதி வழங்க வேண்டும்'

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், ஜாதிய வன்மத்தால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு நீதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூத்தாநல்லூர்: 'வன்மக் கொலைகளுக்கு உடனே நீதி வழங்க வேண்டும்'


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், ஜாதிய வன்மத்தால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூத்தாநல்லூர் அடுத்த பூதமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முஹம்மது பாசித் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜாதிய வன்மத்தால் செய்யப்பட்ட கொலைகளுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் வணக்க வழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நல்லறங்களை அதிகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் முஹம்மது சலீம், மாவட்ட துணைத் தலைவர் பீர்முகமது, மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் மாலிக் இஸ்மத் பாஷா ஜெயினுள் தாரிக் மற்றும் மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா அலாவுதீன், தொண்டரணி செயலாளர் அனஸ் நபில் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com