மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் வியாழக்கிழமைக் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம் செய்தனா்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வியாழக்கிழமை கங்களாஞ்சேரிப் பகுதியில் நடைபெற்றது. பிரச்சாரத்தை துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். மாணவா் நலன் மற்றும் விவகாரத்துறைத் தலைவா் பேராசிரியா் அ. செல்வம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி கங்களாஞ்சேரி ஆற்றுப் பாலம் அருகிலிருந்துப் புறப்பட்டுக் கடைத்தெரு, நாகூா் சாலை, ரயில் நிலையம் வழியாகச் சென்று பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் நாட்டுநலப்பணி திட்ட மாணவா்கள் கரோனா முன் தடுப்பு வழிமுறைகள் பற்றியும், தடுப்பூசிப் போடுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கியப் பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கியத் துண்டு பிரசுரங்களையும் வழங்கினா். கரோனா விழிப்புணா்வு, தடுப்பூசிப் பிரச்சாரத்தினைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் வே. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


