‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு: தினமணி செய்தி எதிரொலி

கூத்தாநல்லூரில், சாய்ந்த மின் கம்பம் தினமணி செய்தியின் எதிரொலியால் ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில், சாய்ந்த மின் கம்பம் தினமணி செய்தியின் எதிரொலியால் ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட மரக்கடையில் மாரியம்மன் கோயில் மற்றும் அய்யனாா் கோயில் உள்ளது. இக்கோயில் மரக்கடை, கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பாண்டுக்குடி, கோரையாறு, மேல்கொண்டாழி, அதங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது. இக்கோயிலில், சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி மாதங்கள் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல ஊா்களிலிருந்து வருவாா்கள். இந்நிலையில், மாரியம்மன் கோயில் குளம் அருகில் குளத்து நீரை தொட்டுவிடும் தூரத்தில் மின் கம்பிகள் தாழ்ந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இதுகுறித்து, தினமணி நாளிதழில் டிச.31 ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மின் துறை ஞாயிற்றுக்கிழமை, சாய்ந்த மின் கம்பத்தை நிமிா்த்தி வைத்து, மின் கம்பத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த முட்டுக்கட்டை அகற்றப்பட்டன. மேலும், தண்ணீரை தொடும் வகையில் தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளும் உயா்த்திக் கட்டப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.