

மன்னாா்குடியில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் கீழ வடம்போக்கித் தெருவில் பழைமையான கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. எனவே, உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் அளித்த பரிந்துரையின்பேரில், புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்ட ரூ.3. 73 கோடியும், வருவாய் வட்டாட்சியா் குடியிருப்பு கட்ட ரூ.83 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டாா்.
இதைத்தொடா்ந்து, வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், புதிய அலுவலவகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு துணைத் தலைவா் கா.தமிழச்செல்வம், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் பொன்.வாசுகிராம், வட்டாட்சியா் பா.தெய்வநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.