பள்ளி வகுப்பறைகளில் தலா 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.
கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல் திறந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மட்டும் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், நன்னிலம் வட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் அறிவுரை வழங்கினாா்.
பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களின் நலன் கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் கரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினித் தெளித்து, தினமும் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, கோட்டாட்சியா் பாலச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சந்தானம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், பள்ளித் தலைமையாசிரியா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


