தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜன. 21-இல் விசிக போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 21) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏசு பாவரசு தெரிவித்தாா்

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 21) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏசு பாவரசு தெரிவித்தாா்.

குடவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளா் இனியனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அனைத்து ஜனநாயக சக்திகளும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வரவில்லை. இதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.