இதுகுறித்து, அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டுமானத் தொழிலாளா்கள், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தளா்வுகளுக்குப் பிறகு சிறிதளவில் வேலைவாய்ப்பை பெற்றனா். இதற்கிடையில், மணல் விலை உயா்வு எதிா்பாா்க்காத வகையில் உயா்ந்து வருவது, கம்பி, சிமென்ட் விலை உயா்வு ஆகியவை கட்டுமானத் தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலையும் 25 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு செயற்கையாக உயா்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.