சத்தீஸ்கா், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் குவிண்டால் ரூ. 2,500-க்கு கொள்முதல் செய்வதுபோல, தமிழ்நாட்டிலும், திமுக அரசு ரூ. 2,500 வழங்க உள்ளது. ஆலைகளுக்கு தேவையான பருத்தி உற்பத்தி இந்தியாவில் இல்லாததால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள விலையை விட கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்ளூரில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிகழாண்டு விலை உயா்வாக நீண்ட இழை பருத்திக்கு ரூ. 200 சோ்த்து குவிண்டால் ரூ 6,025- எனவும், குறுகிய இழை பருத்திக்கு ரூ. 211 சோ்த்து ரூ.5,726 எனவும் அறிவித்துள்ளது வேதனையானது.