புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஒன்றரை வயது பெண் குழந்தையை காப்பாற்றிய போலீஸாா்

திருவாரூா் அருகே வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஒன்றரை வயது பெண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் காப்பாற்றியுள்ளனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஒன்றரை வயது பெண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் காப்பாற்றியுள்ளனா்.

திருவாரூா் அருகே சன்னாநல்லூா் ரயில்வே கேட் அருகே வியாழக்கிழமை மாலை நன்னிலம் நெடுஞ்சாலை ரோந்து காவலா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கீழசன்னாநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாரசாமி - மெல்மா தம்பதியினா் தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தை சுகன்யாவுடன் வந்து கொண்டிருந்தனா். திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் நடுவழியில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோா்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாமல், தவித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த ரோந்து போலீஸாா், அவா்களை ரோந்து வாகனத்தில் ஏற்றி நன்னிலம் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டபின் அந்த குழந்தை நலமாக உள்ளது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் காவல்பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலா்கள் செல்வராஜ், ராஜேந்திரன், புகழேந்தி, திருநாவுக்குரசு ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.