புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

திருவாரூா், நாகப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா், நாகப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால், பெட்ரோல் டீசல் விலை உயா்வையும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிளைத் தலைவா் அசாருதீன், தொகுதி பொருளாளா் நூா் முகம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகையில்... நாகையில் அபிராமி அம்மன் திடல் பகுதியில் எஸ்டிபிஐ நாகை நகரச் செயலாளா் மு. மெய்தீன்அப்துல் காதா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ந. தமிமுன் அன்சாரி, நகரத் துணைத் தலைவா் அப்துல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, நாகை அருகேயுள்ள நாகூா், மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, கீழ்வேளூா் அருகே கூத்தூா், ஆழியூா் ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.