வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கூத்தாநல்லூர்: மனவளர்ச்சி குன்றியோருக்கு தடுப்பு ஊசி

கூத்தாநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றிய 29 பேருக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

News image
கூத்தாநல்லூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கு தடுப்பு ஊசி.
Updated On :18 ஜூன் 2021, 11:48 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றிய 29 பேருக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
கண்ணுக்குத் தெரியாத கிருமியான கரோனா தொற்று உலக  மக்களையே ஆட்டிப் படைத்து வருகிறது. மேலும், பொருளாதாரத்தையும் சீரிழிய வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர ஒரு மருந்து. தடுப்பு ஊசி தான். இந்த தடுப்பு ஊசியை சிலர் அச்சத்தினால் மருந்தை செலுத்திக் கொள்ள மறுக்கிறார்கள். கரோனா தட்டுப்பாட்டால் சிலருக்கு முதல் தவணை ஊசியே போடப்படவில்லை. 
இந்நிலையில், கூத்தாநல்லூர் வட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச் சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், அரசு அங்கீகாரத்துடன் 
மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி என இரண்டு பள்ளிகள் இயங்கி வருகிறது. 14 வயதுக்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 15 நாள்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு விட்டது. 

Story image

தொடந்து, குடிதாங்கிச்சேரியில்  அமைந்துள்ள 14 வயதுக்கும் மேற்பட்ட மன வளர்ச்சிக்  குன்றியவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தடுப்பு ஊசி போடப்பட்டது. திருவாரூர் மாட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் எஸ்.சந்திரமோகன் ஆலோசனையின் படி, மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சி பள்ளி நிறுவனர் ப.முருகையன் ஏற்பாட்டின் படி தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற்றது. 
குடிதாங்கிச்சேரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் ம்ருத்துவர் ராணி முத்துெலட்சுமி தலைமை வகித்தார். மன நல மருத்துவர் டாக்டர் என்.நாகவிகா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மன வளர்ச்சிக் குன்றியவர்கள் 29 பேர், பணியாளர்கள் 6 பேர் என 35 பேருக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டன. 
முகாமில், குடிதாங்கிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரெத்தினவேல், மருத்துவர்கள் விஜய், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.