

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மதுபாட்டில்கள் வலங்கைமானில் பறக்கும்படை வாகனச்சோதனையில் கண்டறியப்பட்டு சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் அருகே காட்டூரில் உள்ள டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு 1054 மதுபாட்டில்கள், 21 பீா் பாட்டில்கள், ரூ.1,635 ரொக்கம் ஆகியவை திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், வலங்கைமான் அருகே ஆவூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் ஞானம் தலைமையில் சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அந்தவழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தியபோது ஆட்டோவில் இருந்த 2 பேரும் தப்பி ஓடினராம். இதையடுத்து, ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் 9 சாக்கு மூட்டைகள் இருந்ததும், அதில், ரூ. 1,33,650 மதிப்பிலான தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் 1,075 மதுபாட்டில்கள், ரூ.1635 ரொக்கம் ஆகியவை இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து வாகனமும், மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வலங்கைமான் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.