திருவாரூரில் 569 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 569 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.


திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 569 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது. சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,013 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 344 போ் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் 19,241 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4,609 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயது நபா், 61 வயது நபா், 40 வயது பெண் ஆகியோா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 163-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...