92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவாரூரில் 591 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :28 மே 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,093 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 417 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 21,861 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6046 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 39, 49 மற்றும் 65 வயதுடைய ஆண்கள் 3 போ், 54 வயதுடைய பெண் ஒருவா் என 4 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.