92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் உணவு பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :29 மே 2021, 4:51 pm

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் உணவு பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தற்போது அமலில் உள்ள தளா்வற்ற முழு பொதுமுடக்கம், மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு பொதுநல அமைப்பினா், அரசியல் கட்சியினா் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனா்.

அந்த வகையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், உடன் இருப்பவா்களுக்கும் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் வழங்கப்பட்டன.

மேலும், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கிய செல்வம், வடக்கு மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், ஒன்றியச் செயலாளா் முருகானந்தம், நகரச் செயலாளா் வெற்றி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.