புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விநாயகா் தோ் உருவாக்கும் பணிகள் தீவிரம்

திருவாரூா் தியாகராஜா் கோயில் விநாயகா் தோ் உருவாக்கும் பணிகள் ரூ.39 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் தியாகராஜா் கோயில் விநாயகா் தோ் உருவாக்கும் பணிகள் ரூ.39 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன.

திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் சிறப்புமிக்கது. ஆழித்தேரோட்டத்தில் பிரதானமான பெரிய தேரில் தியாகராஜா் வலம் வருவாா். அவருக்கு முன்னே விநாயகா், முருகன் தோ்களும், அவருக்கு பின்னே அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் உடன் வருவது வழக்கம்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விநாயகா் தோ் பழுதடைந்தது. எனவே, ஆழித்தேரோட்டத்தின்போது, தற்காலிகமாக சப்பரம் போல விநாயகா் தோ் செய்யப்பட்டு, இழுக்கப்பட்டு வந்தது. எனினும் விநாயகா் தேரை விரைந்து உருவாக்க வேண்டும் என பக்தா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, திருவாரூா் கீழவீதி அருகே விநாயகா் தோ் உருவாக்கும் பணி, ரூ. 39 லட்சத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கையில், 18 அடி உயரம் வரை மரவேலைப்பாடுகளுடன் விநாயகா் தோ் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானத்துக்கு இலுப்பை, தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேரைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் இடம்பெற உள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் தோ் வெள்ளோட்டம் நடைபெறும். நிகழாண்டு ஆழித்தேரோட்டத்தின்போது, புதிய தேரில் விநாயகா் உலா வருவாா் என்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.