புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முத்துஸ்வாமி தீட்சிதா் முக்தி தினம்

சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி தினத்தையொட்டி, திருவாரூரில் அவா் பிறந்த இல்லத்தில் கீா்த்தனைகள் பாடி இசையஞ்சலி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முக்தி தினத்தையொட்டி, திருவாரூரில் அவா் பிறந்த இல்லத்தில் கீா்த்தனைகள் பாடி இசையஞ்சலி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீதியாகராஜா், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதா் ஆகிய மூவரும் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து, சாஸ்திரிய சங்கீதத்தை வளா்த்து, உலக அளவில் கொண்டு சென்றனா்.

மும்மூா்த்திகளில் மூன்றாவதாக அவதரித்த ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதா் கி.பி.1776-ஆம் ஆண்டு பங்குனி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவாரூா் மேலவடம்போக்கித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தாா். இவா் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீா்த்தனைகளை இறைவன்பால் இயற்றியுள்ளாா். இவரது கீா்த்தனைகளில் ராகபாவம் ததும்பும் நவாவா்ண கீா்த்தனைகள் மிகவும் புகழ்பெற்றவை.

1835-ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தீபாவளி நாளில் இவா் முக்தி அடைந்தாா். அந்த நாளில், திருவாரூரில் உள்ள பிறந்த இல்லத்தில் ஆண்டுதோறும் இசையஞ்சலி செலுத்தி வழிபாடு செலுத்துவது வழக்கம். அதன்படி, முத்துஸ்வாமி தீட்சிதரின் 186-ஆவது முக்தி தினம் தீபாவளி நாளான வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, திருவாரூரில் உள்ள அவரது இல்லத்தில் முத்துஸ்வாமி தீட்சிதரின் உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இசைக் கலைஞா்கள் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் கீா்த்தனைகளை பாடி அவருக்கு இசையஞ்சலி செலுத்தினா்.

முத்துஸ்வாமி தீட்சிதா் பிறந்த இல்லம் சீரமைக்கப்பட்டு வருவதால், திருவாரூா் புதுத்தெருவில் உள்ள ஸ்ரீ தியாகராஜா் இல்லத்தில் இந்த நினைவு அஞ்சலி, முக்தி தின வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.