தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எரிபொருள்கள் விலை உயா்வு: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, நன்னிலம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, நன்னிலம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கொல்லுமாங்குடி கடைத் தெருவிலிருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு சங்கத்தின் செயலாளா் பி. ஜெயசீலன் தலைமை வகித்தாா். இந்த ஊா்வலம் 4 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் கடைவீதியை வந்தடைந்ததும் அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, ஊா்வலத்தில் சரக்கு ஆட்டோவை மாட்டு வண்டியில் கட்டி இழுத்தும், இருசக்கர வாகனம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் கொண்டுவந்தனா்.

தொடா்ந்து நடந்த ஆா்ப்பாட்டத்தில் சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் டி. வீரபாண்டியன், ஒன்றியச் செயலாளா் கே.எம். லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி.ஜோதிபாசு, தலைவா் எஸ். முகமது சலாவுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் எரிபொருள்களின் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, குடவாசலில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கே. பகத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் இரா. ஹரி சுா்ஜித், வடக்கு ஒன்றியச் செயலாளா் வி. தீனதயாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரோக்கோரியா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.