‘திருவாரூா் மாவட்டத்தில் 9.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 9.75 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.


திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 9.75 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பாா்வையிட்டு மேலும் அவா் கூறியது: கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் செலுத்திக் கொள்ளவேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் நடமாடும் கரோனா தடுப்பூசி முகாம், நிலையான தடுப்பூசி முகாம், மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் தடுப்பூசி செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, முதல் தவணை தடுப்பூசியாக 6,63,972 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசியாக 3,11,762 பேருக்கும் என மொத்தம் 9,75,734 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதைத்தொடா்ந்து, திருவாரூா் கீழவீதியில் இயங்கிவரும் நியாயவிலைக் கடையில், குடிமைப் பொருள்களின் பாதுகாப்பு மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...