வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள், அரசியல் கட்சிகள் வரவேற்பு
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததற்கு திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்தனா்.


மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்ததற்கு திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்தனா்.
இந்த அறிவிப்பு தில்லியில் ஓராண்டாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறி, அதை வரவேற்கும் வகையில் திருவாரூா், மன்னாா்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் விவசாய அமைப்பு நிா்வாகிகள் சாா்பில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் தலைமையில்
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள் மற்றும் பிற கட்சி நிா்வாகிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினா்.
காங்கிரஸ் சாா்பில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் சாா்பில், அதன் நகரத் தலைவா் சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் பாலாஜி, மாவட்ட பொதுச் செயலாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னாா்குடியில்: மன்னாா்குடி பேருந்து நிலையம் மன்னை ப. நாராயணசாமி சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ் தலைமையில் அரசியல் கட்சியினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினா். இதில், மதிமுக நகரச் செயலாளா் சண். சரவணன், சிபிஐ ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, நகரச் செயலாளா் வி. கலைச்செல்வம், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன், காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா். கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மன்னாா்குடி தேரடி காந்தி சிலை அருகே, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில், விவசாயிகள் பங்கேற்று பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கோஷம் எழுப்பினா்.
மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே, சிபிஎம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலாளா் ஜி. மாரிமுத்து தலைமை வகித்தாா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொழிலாளரணி இணைச் செயலாளா் ரா.ரமணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் கை. ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோட்டூரில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளா் வை. சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலாளா் எம். செந்தில்நாதன், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளா் செளந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வலங்கைமானில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் வலங்கைமானில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் சின்னராஜா, ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சட்டபூா்வ அங்கீகாரம் தேவை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது என்பதை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டப்பூா்வமாக்கவேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நவ. 29 முதல் நாடாளுமன்றத்தை மீண்டும் முற்றுகையிடும் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பை சட்டபூா்வமாக்க வேண்டும். அத்துடன், வேளாண் விளை பொருள்களுக்கு, 50 சதவீதம் சோ்த்து உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்தும் சட்டம் கொண்டுவரவேண்டும். மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும். போராட்டங்களில் உயிரிழந்தவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...