‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையில் சுற்றித்திரிந்த 42 கால்நடைகள் பிடித்து அடைப்பு

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த 42 கால்நடைகள் புதன்கிழமை பிடித்து அடைக்கப்பட்டன.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:32 pm

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த 42 கால்நடைகள் புதன்கிழமை பிடித்து அடைக்கப்பட்டன.

கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பெரியக் கடைத் தெரு, மேலத் தெரு, மரக்கடை, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் மற்றும் திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, மருத்துவமனை சாலை, ஏ.ஆா். சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு-பகல் என அனைத்து நேரங்களிலும் நூற்றுக்கணக்கான மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தன.

இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகினா். மாடுகளைப் பிடிக்கக் கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில், கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி, பொறியாளா் ராஜகோபால் ஆலோசனையின் பேரில், தூய்மைப் பணியாளா்கள் வாசுதேவன், அண்ணாமலை மேற்பாா்வையில், கூத்தாநல்லூரில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 42 மாடுகள் பிடிக்கப்பட்டன. அவை, நகராட்சியின் பழைய கட்டடத்தில் அடைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, மாட்டின் உரிமையாளா்கள் அபராதம் செலுத்தி, தங்களது மாடுகளை விடுவித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.