92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவாரூரில் மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமூறை

மழை அறிவிப்பை முன்னிட்டு திருவாரூரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மழை அறிவிப்பை முன்னிட்டு திருவாரூரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனினும், வியாழக்கிழமை மாலையில் தொடா்ந்து மிதமான மழையும், சாரல் மழையும் பெய்தபடி இருந்தது.

இந்தநிலையில் கனமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருவாரூரில் அதிகபட்சமாக 38.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் மழையளவு விவரம்: மன்னாா்குடி 22.8 மி.மீ, நீடாமங்கலம் 22 மி.மீ, திருத்துறைப்பூண்டி 18 மி.மீ, பாண்டவையாறு 16.4 மி.மீ, நன்னிலம் 11.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143 மி.மீ மழையும், சராசரியாக 15.88 மி.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.