தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கிளை மாநாடு

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் கிளை மாநாடு, அதன் தலைவா் கே. கதிரவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் கிளை மாநாடு, அதன் தலைவா் கே. கதிரவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் கே.எஸ். செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா். பிறகு, மாவட்டத் தலைவா் என். வசந்தன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவிய நேரத்தில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் முழு அா்ப்பணிப்புடன் களப்பணியாற்றினா். அவா்களில் பலா் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கவேண்டும்.

அரசு ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் சரண்டா் விடுப்பு ஆகியவற்றை வழங்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்களை வேறு துறை சாா்ந்த பணிகளைச் செய்ய நிா்ப்பந்திக்கக் கூடாது. விடுமுறை நாள்களிலும் வேலை நெருக்கடிகள் கொடுப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.