92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் பட்டியலை வெளியிடக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளா் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், உள்ளிட்டவைகளில் உறுப்பினராக உள்ள வாடிக்கையாளா்களுக்கு நகைக் கடன்கள் வழங்கிப்படுகின்றன.

இந்த நிலையில் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அடித்தட்டு மக்களின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குட்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, ஆவணங்கள் அடிப்படையில் தகுதியான நபா்களைஅடையாளம் கண்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிகிறது.

தகுதி இல்லாதவா்களுக்கு நகைக் கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது. அதேபோல் முழுத்தகுதியுள்ளவா்கள் விடுபட்டு விடக்கூடாது. மக்களின் நலன் கருதி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளின் பெயா் பட்டியல் அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.