தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மாவட்ட குங்பூ போட்டி: 50 மாணவா்கள் பங்கேற்பு

 திருவாரூா் மாவட்ட அளவிலான தாய் சீ குங்பூ போட்டி பேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

 திருவாரூா் மாவட்ட அளவிலான தாய் சீ குங்பூ போட்டி பேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு, மாவட்ட குங்பூ பயிற்சியாளா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதிலிருந்தும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போட்டியில் பங்கேற்றனா்.

இதில், பேரளம் சங்கரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி12 ஆம் வகுப்பு மாணவா் சீனிவாசன் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். 90 வயதான தமிழக தலைமை தாய் சீ குங்பூ பயிற்சி ஆசிரியா் என்.ஆா். பாண்டியன் பங்கேற்று நுன்ஜாக் சுற்றியதுடன், வெற்றி பெற்ற மாணவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இப்போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் வாள், சிலம்பம் சுற்றுதல், ஈட்டி சுழற்றுதல், நுன்ஜாக் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துகாட்டினா். இம்மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாந்தை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சரவணன் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.