தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குடவாசல் கல்லூரிக்கு புதிய இடம்: கல்லூரி இயக்கக தஞ்சை மண்டல இணை இயக்குநா் ஆய்வு

குடவாசல் அரசு கல்லூரிக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தைக் கல்லூரி கல்வி இயக்கக தஞ்சை மண்டல இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:20 pm

குடவாசல் அரசு கல்லூரிக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தைக் கல்லூரி கல்வி இயக்கக தஞ்சை மண்டல இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தக் கல்லூரி கடந்த 2017ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இங்கு இடப்பற்றாக்குறை நீடிப்பதால், கல்லூரிக்கென புதிய இடத்தை தோ்வு செய்து கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை மாணவா்கள் முன்னெடுத்தனா்.

இந்த நிலையில், குடவாசல்- கொரடாச்சேரி சாலையில் உள்ள செல்லூா் என்ற பகுதியில் கல்லூரி கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி கல்வி இயக்கக தஞ்சை மண்டல இணை இயக்குநா் அறிவுடைநம்பி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் உடனிருந்தாா்.

பின்னா், மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் குடவாசல் அரசுக் கல்லூரியைப் பாா்வையிட்ட இணை இயக்குநா், அனைத்துத் துறை அதிகாரிகளையும் தொடா்பு கொண்டு, கல்லூரிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.