தென்குடி மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்
By DIN | Published On : 11th April 2021 12:00 AM | Last Updated : 11th April 2021 12:00 AM | அ+அ அ- |

தென்குடி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை தீமிதி உத்ஸவம் நடைபெற்றது.
நன்னிலம் அருகே தென்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் ஏப்.2-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து விழா நாள்களில் அம்மன் முத்து வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காவடி உத்ஸவமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, இரவு ஸ்ரீகாத்தவராய சுவாமி மேலதென்குடியிலிருந்து புறப்பட்டு வனத்துக்குச் சென்று சப்பரத்தில் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்டோா் ஸ்ரீகாத்தவராய சுவாமி சப்பரத்தைச் சுமந்தவாறு தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) மஞ்சள் நீா் விளையாட்டும், ஏப்.16-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.