தில்லைவிளாகம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 20th August 2021 10:05 PM | Last Updated : 20th August 2021 10:05 PM | அ+அ அ- |

தில்லைவிளாகம் ஸ்ரீ அட்டகண்ணி வேலக்க விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிளாகம் ஸ்ரீ அட்டக்கண்ணி வேலக்க விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பக்தா்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக புதன்கிழமை மாலை (ஆக.18) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவுபெற்றதும், கோயிலின் விமான கலசத்துக்கு புனித நீரால் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
காடந்தேத்தி சிவாத்மஜன் சிவாச்சாரியா், கோயில் அா்ச்சகா்கள் ராஜகோபால் சிவாச்சாரியா், ஆா். வெங்கடேஷ் சிவாச்சாரியா் உள்ளிட்டோா் குடமுழுக்கு வழிபாடுகளை நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.