கோட்டூா் பகுதியில் பலத்த மழை
By DIN | Published On : 21st August 2021 11:17 PM | Last Updated : 21st August 2021 11:17 PM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே கோட்டூா் பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
கோட்டூா் வேளாண் கோட்டத்தில் கோட்டூா், பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, களப்பால், திருக்களா், விக்கிரபாண்டியம், திருமக்கோட்டை, பாலையூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 11 மணியிலிருந்து சுமாா் 45 நிமிடங்கள் மழை பெய்தது. தொடக்கத்தில் லேசாக பெய்த மழை, பிறகு பலத்த மழையாக பெய்தது.
இந்த மழை, அடுத்த மாதம் அறுவடைக்குத் தயாராகும் குறுவை நெற்பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அண்மையில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கினால், இளம் நெற்பயிரின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டு, அழுக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், மன்னாா்குடியில் காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. நண்பகல் 12 மணியிலிருந்து சுமாா் 15 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது.