சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரந்தன் புரஸ்கா் விருது பெற ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரிடா் மேலாண்மை துறையில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணிகளை அங்கீகரிப்பதற்காக, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரந்தன் புரஸ்கா் என்ற விருது இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.