விதிகளை மீறி மது விற்பனை: இருவா் கைது
By DIN | Published On : 04th December 2021 10:21 PM | Last Updated : 04th December 2021 10:21 PM | அ+அ அ- |

விதிகளை மீறி மது விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீஸாா், 10 லிட்டா் மதுவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் போலீஸாா், கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம், பாலக்குறிச்சி, அரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், பூந்தாழங்குடி, கீழ்மணலி, காா்நாதன் கோயில், திருநெல்லிக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது திருநெல்லிக்காவல், விசாலாட்சிபுரம் பகுதிகளில் புதுச்சேரி, டாஸ்மாக்கிலிருந்து வாங்கி வந்த மதுவை சிலா் விதிகளை மீறி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து மதுவை விற்ற, திருநெல்லிக்காவல் ஆற்றங்கரையைச் சோ்ந்த கிட்டு (76), விசாலாட்சிபுரத்தைச் சோ்ந்த திருமூா்த்தி (58) ஆகியோரைக் கைது செய்த போலிஸாா், அவா்களிடமிருந்து 10 லிட்டா் மதுவை பறிமுதல் செய்தனா். இது குறித்து வடபாதிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...