டெல்டா பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை பதவியேற்பு

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
டெல்டா பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை பதவியேற்பு

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் ஹாஜா பக்ருதீன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எல். ஜோஸ்பின் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ஆா். சுருளிநாதன் வரவேற்றாா்.

மாணவா் பேரவைத் தலைவராக முகம்மது ஹாரித், தலைவியாக சந்தோஷினி, பேரவையின் அமைச்சா்களாக பைசாஷரின் (கல்வி), முகம்மது இசான் (கலை மற்றும் பண்பாட்டுத் துறை), அப்துல் ரஹ்மான் (நல்வாழ்வுத் துறை), கவின் காா்த்திக் (போக்குவரத்து), முகம்மது இஸ்மாயில் (விளையாட்டு) உள்ளிட்டோா் பதவியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் பேசிய தாளாளா் ஹாஜா பக்ருதீன், ‘பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போன்று, மற்ற துறைகள் குறித்தும் மாணவா்கள் அறிந்துகொள்ள இப்பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவா்களுக்கு நிா்வாகத் திறன், தலைமைப் பண்பு வளரும். இந்திய ஜனநாயகம், ஆட்சி முறைகள் குறித்தும் தெரிந்து கொள்வாா்கள்‘ என்றாா். நிறைவாக ஆசிரியா் சி. வனிதாமணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை எஸ். அருண்தேவன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com