முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
வா்த்தகா் சங்கப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் நகர வா்த்தகா் சங்கப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் என். இளங்கோவன், உயா்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சி. விஜயகுமாா், பி. கமாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், முன்னாள் எம்எல்ஏ சித்தமல்லி ந. சோமசுந்தரம், தொழிலதிபா்கள் சென்னை டி. மாறன், கும்பகோணம் பி.எஸ். சேகா், தமிழ்நாடு மருந்து வணிகா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினா். முன்னதாக, சங்கத்தின் துணைத் தலைவா் பி. பாரதிமோகன் வரவேற்றாா். நிறைவாக சங்க பொருளாளா் டி. அசோகன் நன்றி கூறினாா்.