மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் துறையுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் ஜெபமாலை தலைமை வகித்தாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா், திருவாரூா் இணையவழி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் கணபதி ஆகியோா் இணைய பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை குறித்தும், குற்றங்களை தவிா்க்கும் வழிமுறைகள் பற்றியும், இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனா்.
இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) இமயவரம்பன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னை அபிராமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.