திருவாரூர் கமலாலயக் குளம்: இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் கமலாலயக் குளக்கரையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
திருவாரூர் கமலாலயக் குளம்: இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆய்வு

திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் ஒரு பகுதி அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதையொட்டி அப்போது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த கோரியிருந்தார். எனினும் பணிகள் ஏதும் நடைபெறாததால் ஆழித்தேரோட்டம் பங்குனி ஆயில்யத்தில் நடைபெறுமா என்ற ஐயம் பக்தர்களுடைய எழுந்தது.

இந்த நிலையில் திங்கள்கிழமை,  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீண்டும் திருவாரூர் வந்தார். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் கமலாலயக் குளக்கரையை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன்,  சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com