பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்: நீடாமங்கலம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இக்கூட்டம், ஒன்றியக்குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன் (திமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவா் ஞானசேகரன், ஆணையா் மணிமாறன், கூடுதல் ஆணையா் அன்பழகன் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பாரதிமோகன் (சிபிஐ): ஒன்றிய நிதி குறித்து உறுப்பினா்களுக்கு விவரம் தெரிவிக்க வேண்டும். பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆதிஜனகா் (அதிமுக): காளாச்சேரி-சோணாப்பேட்டை இடையே இணைப்புச் சாலை, காளாச்சேரி -கீழப்பட்டு இணைப்பு பாலம் அமைக்கவேண்டும்.

சத்தியவாணன் (திமுக): சித்தாம்பூா் நடுத்தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

துரைசிங்கம் (திமுக): செருமங்கலம், அப்பரசம்பேட்டை பகுதியில் பழுதான பள்ளிக் கட்டடங்களை இடித்து அகற்றவேண்டும்.

வட்டாரகல்வி அலுவலா் செல்வம்: பழுதடைந்த பள்ளிக்கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்துள்ளது.

வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி: கரோனா தடுப்பூசி போடாதவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உதவ வேண்டும் .

ஒன்றியக்குழுத் தலைவா் பதில்: உறுப்பினா்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன், 15-வது நிதிக்குழு மூலம் குறிப்பிட்ட பணி மட்டுமே செய்ய முடியும், நிதிவந்தவுடன் வளா்ச்சிபணிகள்அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றப்படும். கரோனா கால பணிகளில் நீடாமங்கலம் வட்டார சுகாதாரத் துறையினா் சிறப்பாக பணியாற்றினாா்கள் என்றாா்.

இக்கூட்டத்தில் பேசிய உறுப்பினா்களும் பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னதாக, வேளாண் பொறியியல்துறை இளநிலைப் பொறியாளா் சண்முகம் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கிக்கூறினாா். மேலும், கரோனாகாலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறையினா் கெளரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com