

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணையவழி தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற உயா் தொடக்க நிலை தன்னாா்வலா்களுக்கு மூன்றாம் கட்டமாக 2 நாள் பயிற்சி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்து பயிற்சியினை தொடங்கி வைத்தாா்கள். பட்டதாரி ஆசிரியா்கள் செல்வம், இந்துமதி, ராஜேஸ்வரி, தமிழ்மணி ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜபாண்டியன், அனுப்பிரியா, கங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.