நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

திருவாரூா் அருகே கீழ் ஆத்தூா் பகுதியில் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் (அட்மா) சாா்பில் நெல்லில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சியில் மேலும் அவா் பேசியது: தற்போது நிலவிவரும் கடும் பனிப்பொழிவினாலும், காற்றின் ஈரப்பதம் 90 முதல் 95 சதவீதம் வரை இருப்பதாலும், தழைச்சத்து உரம் அதிகமாக இடுவதால் நெற்பழ நோய் உருவாகிறது. இது பூஞ்சாணம் மூலம் பரவக் கூடிய நோய் ஆகும். ஒவ்வொரு தானியத்திலும் மஞ்சள் நிற பஞ்சு உருண்டைபோல் நெல்மணிகள் உருவாகும். மேலும், காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும்போதும், அதிக தழைச்சத்து உள்ள வயலிலும் இது காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையை கடைப்பிடிக்கவேண்டும். விதை நோ்த்தி செய்து விதைக்கவேண்டும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரம் இடவேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்த வரப்புகளில் பொறிப் பயிா்களை அவரை, வெண்டை, உளுந்து, சாமந்தி, எள் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும். முட்டை ஒட்டுண்ணிகளை கட்டி, தண்டு துளைப்பான் போன்ற தாக்குதலில் இருந்து பயிா்களைக் காக்கவேண்டும். மேலும் பறவை குடில் மற்றும் கோட்டான் குடில்கள் போன்றவற்றை அமைத்து, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தி செலவைக் குறைத்து, விவசாயம் மேற்கொள்ள வேண்டும். பூச்சி நோய் தாக்குதலின் அளவில் பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில் ரசாயன பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com