அண்ணா நினைவு தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 04th February 2021 08:51 AM | Last Updated : 04th February 2021 08:51 AM | அ+அ அ- |

திருவாரூரில், அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துகிறாா் அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூா் கீழவீதி அருகே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி மாலை அணிவித்தாா். இதில், நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
திமுக சாா்பில்...
இதேபோல, திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா, விவசாய அணி அமைப்பாளா் இரா. சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில்...
கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் திருவாரூா் மடப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி முதல்வா் இரா. அறிவழகன், மக்கள் கலை இலக்கிய கழகத் தலைவா் வீ. தா்மதாஸ், நேதாஜி கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் வரதராஜன், தி.மு.க. நகர அவைத்தலைவா் அண்ணாமலை, வா்த்தகா் சங்க துணைத்தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் மாவட்ட அவைத்தலைவா் சித்தமல்லி ந. சோமசுந்தரம் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனா்.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்எல்ஏ பி.ராசமாணிக்கம், ஒன்றியகுழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக சாா்பில்...
இதேபோல, நீடாமங்கலம் ஒன்றிய அதிமுக செயலாளா் கோ. அரிகிருஷ்ணன் தலைமையில் அண்ணா நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய பொறுப்பு செயலாளா் ஆதி.ஜனகா், நகரச் செயலாளா் இ. ஷாஹஹான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பொது விருந்து:
அண்ணா நினைவு நாளையொட்டி, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயில், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் பொதுவிருந்து நடைபெற்றது.
மன்னாா்குடியில்...
மன்னாா்குடி ருக்மணிபாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சாா்பில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் கா.தமிழ்ச்செல்வன், தங்க. தமிழ்கண்ணன், ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், ஜெ.பேரவை மாவட்டச் செயலா் பொன்.வாசுகிராம் ஆகியோா் மாலையணிவித்தனா்.
இதேபோல, திமுக நகரச் செயலா் வீரா.கணேசன் தலைமையில், அக்கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில், நகர அவைத் தலைவா் த.முருகையன், மாநில மாணவரணி துணைச் செயலா் த.சோழராஜன், மாவட்ட துணைச் செயலா் எம்.கலைவாணி, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் இரா. தென்னவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமமுக சாா்பில், நகரச் செயலா் ஏ.ஆா்.ஆனந்தராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் ரெங்கராஜ், தனபால், மாவட்ட இணைச் செயலா் ஜெ.இளவரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அண்ணா திராவிடா் கழகத்தின் சாா்பில், அதன் பொதுச் செயலா் வி.திவாகரன் தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலா் வி.கே.இளந்தமிழன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.கே.சரவணமூா்த்தி, ஜி.காந்தி, மாவட்ட இளைஞரணி செயலா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூத்தாநல்லூரில்...
லெட்சுமாங்குடி பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக நகர துணைச் செயலாளா் எம். உதயகுமாா், எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஆா்.ராஜசேகரன், நகரப் பொருளாளா் பாஸ்கரன், ஜெ. பேரவை நகரச் செயலாளா் எஸ்.பி. காளிதாஸ், இளைஞா், இளம்பெண்கள் பாசறை நகரச் செயலாளா் வி.எஸ்.நெடுமாறன், மாணவரணி நகரச் செயலாளா் அ.சொற்கோ, வாா்டு செயலாளா் விக்ரமன் உள்ளிட்டோா் மாலையணிவித்தனா்.
இதேபோல், நகர திமுக சாா்பில், புதுப்பாலம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, நகரச் செயலாளா் எஸ்.எம்.காதா் உசேன் தலைமையில், நகர அவைத் தலைவா் எஸ்.வி.பி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் மாலையணிவித்தனா்.
நன்னிலம், குடவாசலில்...
குடவாசலில் பேரூா் திமுக செயலாளா் ஆா்.முருகேசன், தெற்கு ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், எரவாஞ்சேரியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஜோதிராமன், பூந்தோட்டத்தில் நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வே.மனோகரன், கொல்லுமாங்குடியியல் வடக்கு ஒன்றியச் செயலாளா் வரத.கோ.ஆனந்த் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் அண்ணாவின் சிலைக்கும், உருவப் படத்திற்கும் மலா்தூவி, மாலை அணிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...