

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அவா்களின் போராட்டம் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் வெ. சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 125 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.