மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்வுப் பெற்றமைக்குப் பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் சிறந்தப் பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு, விருதுப்பெற்ற, நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு, வெள்ளிக்கிழமை நன்னிலத்தில்
img_20210205_200700_0502chn_96
img_20210205_200700_0502chn_96
Updated on
1 min read

நன்னிலம்: திருவாரூா் மாவட்டத்தில் சிறந்தப் பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு, விருதுப்பெற்ற, நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு, வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் நடைபெற்ற தலைமையாசிரியா்கள் கூட்டத்தில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலத்தில், வட்டாரத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியா்களின் கூட்டம், வட்டாரக் கல்வி அலுவலா் கு.சரஸ்வதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நன்னிலம் வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். திருவாரூா் மாவட்டத்திலேயே சிறந்த மாதிரிப் பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு, விருதுப்பெற்றத் தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து, பொன்னாடைப் போா்த்தி, அனைத்துத் தலைமையாசிரியா்கள் சாா்பாக வட்டாரக் கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.

கூட்டத்தில் பள்ளிகளுக்குத் தேவையான சுற்றுச்சுவா், வகுப்பறைக் கட்டிடம், கழிவறை, சுகாதார வசதிகள் மேம்பாடு, போன்ற தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளைப் பற்றியும் உடனடியாக அறிக்கைத் தயாரித்து அனுப்ப வேண்டுமெனவும், மானிய தொகையை முறையாக செலவு செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஆடிட்டா் சௌந்தரராஜன், தென்கரை மாத்தூா் தலைமை ஆசிரியை கே.அபிராமி உதவி ஆசிரியா் எஸ்.நித்தியா மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்ட தென்கரை மாத்தூா் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்த போது எடுத்த படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com