ஆதரவற்ற பெண் குழந்தை மீட்பு
By DIN | Published On : 14th February 2021 08:51 AM | Last Updated : 14th February 2021 08:51 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட பெண் குழந்தை.
திருவாரூரில் ஆதரவற்ற நிலையிலிருந்த 3 வயது பெண் குழந்தை சனிக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் கமலாலயக் குளத்தின் மேல்கரை பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை சனிக்கிழமை காலை ஆதரவற்ற நிலையில் நடமாடிக்கொண்டிருந்தது. அப்பகுதியினா் அந்தக் குழந்தையை மீட்டு, திருவாரூா் நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பிறகு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள், அந்தக் குழந்தையை அரியலூா் பகுதியில் உள்ளஅரசு அனுமதி பெற்ற தத்துவள மைய காப்பாளா்களிடம் ஒப்படைத்தனா்.
இதற்கான நிகழ்ச்சியில், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ் செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.