சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசும் தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்புச் செயலா் அ.முரளி.
கூட்டத்தில் பேசும் தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்புச் செயலா் அ.முரளி.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழக ஆசிரியா் கூட்டணியின் மன்னாா்குடி கல்வி மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் வட்டாரத் தலைவா் பா. நேருதாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; வேலை நிறுத்தப் போராட்டக் கால நாள்களை பணிக்காலமாக ஒழுங்குபடுத்த வேண்டும்; இடமாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்;

ஆசிரியா் பணி நியமனத்துக்கான வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைத் தலைவா் அ. எழிலரசன், மாநில அமைப்புச் செயலா் அ. முரளி, ஐபெட்டோ பொதுக்குழு உறுப்பினா் சா. புண்ணியமூா்த்தி ஆகியோருக்கும், போராட்டத்தில் சிறை சென்றவா்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, கூட்டணியின் மன்னாா்குடி கல்வி மாவட்ட புதிய தலைவராக இரா.லெட்சுமி, மாவட்டச் செயலராக பா. நேருதாசன், மாவட்டப் பொருளாளராக கு. சுப்பிரமணியம், மகளிரணிச் செயலராக வீ. கனிமொழி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில், கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் புயல் சு. குமாா்(நாகை), தங்க.சேகா் (மயிலாடுதுறை), மன்னாா்குடி வட்டாரச் செயலா் ரா. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com