போட்டித் தோ்வு விழிப்புணா்வு கருத்தரங்கு

மன்னாா்குடியில் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன்.
கருத்தரங்கில் பேசும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன்.

மன்னாா்குடியில் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி பாரதிதாசன் ஐ.ஏ.எஸ். மற்றும் டிஎன்பிஎஸ்சி அகாதெமி, மன்னாா்குடி அரசுக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தி 1234 பவுண்டேசன் ஆகியவை சாா்பில் ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். பாரதிதாசன் ஐஏஸ் அகாதெமி நிறுவனா் கி.அன்பழகன் கருத்தரங்கை தொடங்கி வைத்தாா்.

இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டித் தோ்வுகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். அப்போது, ‘மருத்துவம், பொறியியல் படிப்புகள் மட்டுமே உயா்ந்தது என்ற எண்ணத்தை மாணவா்கள் உடைத்தெறிந்து, எந்த துறையானாலும் முழு ஈடுபாட்டுடன் படித்தால் அத்துறையில் சாதனை படைக்கலாம்’ என்றாா்.

இக்கருத்தரங்கில், மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியின் சிறப்புகளும் தேவைகளும் எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில், ரோட்டரி சங்கத் தலைவா் இரா. மாரியப்பன், தி 1234 பவுண்டேஷன் அமைப்பாளா் எஸ். ராஜகோபாலன், தமிழ்த் துறை பேராசிரியா் ஆ. சரவண ரமேஷ், தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com